Sunday, September 19, 2021

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

 

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்



கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்கம் செய்துள்ளது. மருத்துவத் துறை சார்ந்தவர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்களாகப் பார்க்கும் புதியதான ஒரு நோக்கு நிலை உண்டாகியுள்ளது. உண்மையில், இப்பார்வை நம்முடைய இந்தியச் சமூகத்திற்கு ஒன்றும் புதிதில்லை. ஏனெனில், இவ்வகையிலான பார்வை என்பது பசு மாட்டைத் தடவிக்கொடுத்துப் பால் கரக்கும் பார்ப்பனியக் காலனிய மனநிலையின் வெளிப்பாடு. இதைப் புரிந்துகொள்வதற்குப் பெரிய அறிவுஜீவியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முன்களப் பனியாளர்களாக இருக்கக்கூடிய செவிலியர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் முன்களப் பணியாளர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் என்றெல்லாம் சொல்லி உற்சாகப்படுத்துவதன் மூலம் அவர்களை உளவியல் ரீதியாக அதே பணியை இன்னும் சிறப்பாகச் செய்வதற்காகத் தாயார்ப்படுத்துகிறோம்.

கொரானவிற்கு எதிரான செயல்பாட்டுத்தள முன்களப் பணியாளர்களில், செவிலியர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறதா என்றால், இல்லை என்பதுதான் நிதர்சனம். கொரானாவிற்கு எதிரான போர்க்களத்தில் மருத்துவத்துறைக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு உபகரனங்களும் உத்தரவாதமும் கவசங்களும் அதே அளவு முதன்மையானவர்களாக இருக்கக் கூடிய சுகாதாரத் துறையின் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. வாரத்திற்கு ஒரு மாஸ்க், சில இடங்களில் வாரத்திற்கு 2 மாஸ்க் மட்டுமே தருகின்றனர். இவர்களைப் பொருத்த வரையில் ஒரு மாஸ்க்கை ஆறு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது. அதேபோல் அவர்களுக்கு சானிடைசர், சோப் என எதுவும் தரப்படவில்லை. - கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் ! (https://www.vinavu.com/2020/05/04/chennai-corona-frontline-warriors-cleanliness-worker-interview/) (பார்வை நாள் 03.07.2021) நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமணைகளில் பணியில் இருக்கக் கூடிய சுகாதாரப் பணியாளர்களுக்கும்கூட ஒரு செவிலியருக்குக் கொடுக்கப்படக்கூடிய பாதுகாப்பு உபகரனங்கள் கொடுக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை உங்கள் சிந்தனையைத் தூண்டியுள்ளதென்றால் இதில் உள்ள நுண்அரசியலை எளிமையாகப் புரிந்துகொண்டீர்கள் எனலாம்.

            பாதுகாப்பாகப் பணியாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் விரைவாகவும் தரமானதாகவும் ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கக்கூடிய அரசு, சுகாதாரப் பணியாளர்கள் செய்யக்கூடிய பணி என்பதே ஆபத்து நிறைந்தது என்பதை அறிந்தும் அத்தகைய ஆபத்துகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியங்களையோ பாதுகாப்பாக அதே வேலையைச் செய்வதற்கான சாத்தியங்களையோ உருவாக்கிக் கொடுப்பதில் சுணக்கம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது. கொரோனாவை வெல்வதற்காக நிதி கேட்டு, வாங்கி ஆய்வுத் திட்டம் வகுத்துச் செயல்பட முன்வரும் அரசு மலக்குழி மரணங்களைத் தவிர்ப்பதற்காக எந்த ஆய்வுத்திட்டங்களையும் வகுப்பதில்லை. அப்படியே வகுத்தாலும் அவை வெற்றிகரமாக செயலாக்கம் பெறுவதில்லை.

            இன்னும் நுட்பமாக, அரசு இந்த குற்ற உணர்விலிருந்து / குற்றவுணர்வு ஏற்பட்டுவிடக்கூடாதென்று எளிதில் விடுபட்டுக்கொள்ளும் பொருட்டு, இந்த அடிமட்ட நிலையிலிருக்கக்கூடிய இந்தச் சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கக்கூடிய சுகாதாரப் பணியாளர்கள் அரசு வேலை என்ற நிலையிலிருந்து காண்ட்டக்டர்களிடம் தினக்கூலிகளாக இருத்தப்பட்டுள்ளனர். அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து இவர்களுக்குச் செய்துகொண்டிருந்த குறைந்த பட்சச் சலுகைகளும் இந்த அளவில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.  இப்படியான சமூகப் பின்புலத்தில்தான், அறிவழகனின் ‘கழிசடை’ என்ற நாவல் இன்றைக்கு மீள்வாசிப்பிற்கான பிரதியாக சமூக, இலக்கியத் தளங்களில் புழக்கத்திற்கு வந்துள்ளது.

            நாவல், மலம் அள்ளக்கூடிய தூய்மைப் பணியாளர் பணியைச் செய்யக்கூடிய, விளிம்புநிலை மக்களில் ஒரு பகுதியினராக இருக்கும் சுகாதாரப் பணியாளர்களாக இருக்கக்கூடிய மனிதர்களின் வாழ்வியலை அனுமந்தையா, சுடலை என்ற இருவரின் வாழ்நிலையை முன்னிறுத்திப் பேசுகிறது. கதை, இரண்டு பகுதிகளாக விரிகிறது. முன்னது, அனுமந்தையாவின் வாழ்வியல் வழி சாக்கடை, மலக்குழிகளைச் சுத்தம் செய்யும் மனிதர்களையும் பின்னது, சுடலையின் வாழ்வியல் வழி வெட்டியான் தொழிலைச் செய்யக்கூடிய பிணம் எரிப்பவர்களின் அல்லது புதைப்பவர்களின் அன்றாடச் சிக்கல்களைப் பேசுகிறது. இவ்விருவேறு வகையான தூய்மைப்பணியாளர்களின் உடல் உழைப்பு மேலதிகாரிகளால் சுரண்டப்படுவதையும் அதிகாரிகளின் சுரண்டல் வடிவங்கள் தூய்மைப்பணியாளர்களின் உளவியலை கையறு நிலைக்குத் தள்ளக்கூடிய வகையில் வெளிப்படுவதையும் வெளிச்சப்படுத்துகிறது. இப்பிரதி, சுகாதாரப் பணியாளர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் இனவரைவியலாகவும் அமைந்துள்ளது. 

Saturday, September 18, 2021

நாடகத்தில் விழிப்புணர்ச்சி - டாக்டர் இரா. சனார்த்தனம்.

 3. நாடகத்தில் விழிப்புணர்ச்சி


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம்.

நூற்றாண்டின் தொடக்கத்திலும்தான் நாடகக் கலை, எழுத்திலும்

அரங்கிலும், பழைய இலைகளை உதிர்த்துவிட்டு, புதிய தளிர்களைக் காட்டும். இளவேனில் இன்பம்போல புதுமை கொண்டது.


அறிவொளி சிறந்த கற்றறிந்த அறிஞர்கள் அழிந்து கிடந்த நாடக அரங்கத்தின் நெறியொளியாகவும் தனியொளியாகவும் விளங்கினர்.


 *பேராசிரியர் சுந்தரம் பிள்ளை* 


மஞ்சள் நீராடி, மலர் சூடி பொன் அணி பூண்டு, கண்கவர் வண்ணச் சேலையணிந்தும் கணவன் அன்புபெறாத பெண்போல் இருந்த தமிழ் நாடகம், கணவனின் காதலிக்குரிய பெண்ணைப் போல் மகிழ்வுற்ற இந்த நேரத்தில்தான் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, இலிட்டன் பாவலர் எழுதிய 'மறை வழி' (Secret way) கதையைச் சேக்குவியர் பாணியில் செய்யுள் நாடகமாகச் செய்தார். இது நடிப்பதற்கென்றில்லாமல், படித்துணர்வதற் கென்றே நல்ல செந்தமிழ்நடையில் எழுதப்பட்டதாகும். இலக் கியச் செறிவும், மெய்ப்பொருள் பேருரையும் பின்னிப்பிணைந்த இந்நாடக நூல் சுற்றாரிடைப் புகழ் எய்தி பிற்காலப் பாவடிவ நாடக நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது. ஆனால். மக்கள் இலக்கியமாக விளங்கவில்லை. இந்நூல் உண்மைக்கும் ஒழுக்கத்திற்கும் உயர்வு கொடுத்திருப்பது போன்றே தமிழ் உணர்ச்சிக்கும் தமிழர் எழுச்சிக்கும் உயர்வு கொடுத்துள்ளது.


 *பரிதிமாற் கலைஞர்* 


ஆங்கில அறிவோடு வடமொழிப் புலமையும் கொண்ட பரிதி மாற் கலைஞர் ஆங்கில வடமொழி மரபுகளையும் பின்பற்றி ""நாடகவியல்", என்ற நூலெழுதிய அவர், ரூபாவதி, கலாவதி போன்ற நாடக நூல்களை எழுதினார். இவர் இயற்றிய நாடக

நூல்கள் கற்றோர்க்கே புரிய வல்ல அரிய தமிழ் நடையும், பாட்டினமும் கொண்டு பொதுமக்கட்கு எட்டாத் தொலைவிலேயே நின்று நிலவின. அவைகவை நூலாசிரியர் தாமே தம் நண்பர்களுடன் நடித்தார். வெற்றி இல்லை என்றாலும் கற்றாரிடம் நாடக்கக் கலை வளர்ந்தது. படித்துப் பண்பட்டவர்கள் நடிப்புத் துறையில் இரங்கியவுடன் சிற்றூர்களில் செத்தழிந்து கொண்டிருந்த புராண இதிகாச, நாட்டுப்புறக் கதை நாடகங்கள் எல்லாம் புற்றீசல்கள் போல் எங்கும் பறக்கத் தொடங்கின.


 *சங்கரதாக சுவாமிகள் (1867-1922)* 


19ஆம் அற்குண்டின் இறுதியில் தோன்றிய புற்றீசல் நாட ஒழுங்குபடுத்தியும் திருத்தியும் புதிய நாடகங்களாக அபிபன்பு, சுந்தர், பவளக்கொடி சீமந்தனி, சதி அனுகயா, பிரசுவாதன், சிறுத்தொண்டர்,சதிகலோசனா, ரோமியோ. ஜூலியத், கண்டிராஜா ஆகிய நாடங்களை எழுதி, நாடகக் குழுக்களுக்குக் சொடுத்துக்கொண்டிருந்தார், சங்கரதாசு சுவாமி கம் என்னும் நாடக ஆசிரியர். இருபதாம் நூற்றாண்டின் தோடக்கத்தில், இவர் பாட்டும் உரைநடையும் மக்களை மிக சுவர்ந்தன. எளிமையும் நகைச்சுவையும் இவருக்குக் கொடுத் எனிய பாடல்கள் கல்லார்க்கும் இன்ப மூட்டின.


இவகுடைய காலத்தைச் சேர்த்தவர் "நாடகத் தந்தை" என்றழைக்கப்படும் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்கள். இவர் ஒருவர்தான் "காதலர் கண்கள்'', "வேதாள உலகம்", ''சபாபதி"''மனோகரா" போன்ற பல நாடகங்களை முழுக்க முழுக்க உரைநடையில் எழுதி அரங்கேற்றித் தாமும் நடித்துத் தம் தம் நண்பர்களையும் உறுப்பினர்களாக்கி நடிக்க வைத்தவர்.


20ஆம் நூற்றாண்டின் நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார் (1873-1964)


படித்துப் பட்டம் பெற்று வழக்கறிஞருமாகி, உயர் நீதிமன் ற தடுவராகவும் விளங்கிய இவர், நாடகங்களில் பங்குபெற்றதால் நஞைர்களைக் கூந்தாடிகள் என்று அழைப்பதை மாற் நீச சமுதாயத்தில் நாடகக் கலைஞர்களுக்கு மதிப்பையும் சிறப் பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். தமக்கென்று ஒரு நாடக மன் றம் அமைத்து, இருபத்தைந்து ஆண்டுகாலம் நாடகங்களை நடத் தினார், அவற்றைத் தொடர்ந்து வெளியிட்டார்.

சேக்குவியர் நாடகங்களைத் தமுனி, "அமலாதித்தன்"


"ரோமியோ - ஜூலியத்", போன்ற நாடகங்களை எழுதினார். "மனோகரா", "சபாபதி" போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட கற்பனை நாடகங்களை எழுதியும், மறைந்த மாப்பேரறிஞர்கள் சர் ஆர். கே. சண்முகம். சர் சி. பி. இராமசாமி போன்றவர் களை அந்த நாடகங்களில் நடிக்கச் செய்தும் நடிப்புக்கலைக்கு உயர்வையும் பெருமையும் சேர்த்தார். தமிழில் அதுநாள்வரை காணாத துன்பியல் நாடகங்களையும் துணிந்து நடத்திக்காட்டி வெற்றி பெற்றார்.


20ஆம் நூற்றாண்டின் நாடகத் தந்தை என்று பம்மல் சம் பந்தனார் பெயர் பெற்றாலும் நடிப்பிற்கும் படிப்பிற்கும் அறிமுக மாக அவர் நாடகங்கள் மக்களுக்கு வெறும் மகிழ்ச்சியை ஊட் டினவே தவிர, மக்கள் வாழ்வின் பொருளாதாரச் சிக்கல்களை யும், ஏற்றத்தாழ்வுப் புதிர்களையும் தீர்த்து, வாழ்வை ஒருபடி முன்னேற்றம் உந்தாற்றலாக மாறவுமில்லை; மாற்றவுமில்லை!


நாடகக் கலையை உயர்த்த வேண்டும்; நாட்டு மக்களைத் தமிழ் நாடகக் கலையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணத் தோடு, குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பூசல்களைத் தீர்க்கும் அறி வுரைகளை நிறைத்தே நாடகங்களைப் படைத்தார் பம்மல் சம் பந்தனார். நாட்டுணர்ச்சியையோ, இனவுணர்ச்சியையோ, மொழி வுணர்ச்சியையோ, சமுதாய சீர்திருத்தத்தையோ எண்ணவும் இல்லை: அதில் ஈடுபடவுமில்லை. அவரின் நண்பர் அவர் கள் யாரும் அந்தச் சூழலை விரும்பவும் இல்லை எனலாம். ஆதலால் அவர் தென்னசுப் பண்பாட்டில் புத்தெண்ண மலர்ச்சிக்குரிய திட்டப் பாங்கோடு செயல்புரியவில்லை, சிந்திக்கவில்லை. அதனால் தான் போலும் அவர் காலத்தோடு அவர் நாடகங்களின் நட மாட்டம் நின்றுவிட்டது. ஆனால், மாண்டுவிட்டதே நாடகக் கலை என்று வருந்திய நேரத்தில் அதற்குப் புத்துயிர் தந்த பெருமை இவரையே சாரும்.


தமிழகத்தில் பம்மல் சம்பந்தனாரைப் பின்பற்றிப் பல ஆசிரி யர்கள் தோன்றினார்களாயினும், அவர்கள் அனைவரும் ஐரோப் பிய நாட்டில் ஆடி அலுத்துப்போன மட்டமான காதலன் காதலி கொடியவன் கதைகளும், மூடத்தனத்தின் முடை வீசுகின்ற கூத்தாட்டமும், 'பரமசிவன் அருள்புரிய வந்து வந்து நாற்றம் போனதும், பதிவிரதைக் கின்னல் வரும். பழையபடி தீருவதுமாகிய

நாடகங்களையே நடத்தினர்.


பாவேந்தர் பாரதிதாசனும்:


ஒருநாட்டின் வேரிலுள்ள தீமை நீங்கி


உட்புறததில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும் பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டு தற்கும், சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்! (முல்லைக்காடு)


பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப் பிடித்தபிடி பில்முடித்துத் தீர்ப்பதற்கும்,


பிறநாட்டார் நாடகங்கள் செய்வார், என்றன் திருநாட்டில் பயனற்ற நாட கங்கள்


என்றார்.


அன்றிருந்தவர்கள், வாழ்க்கையைச் சித்திரிக்கும் புத்தம்புது உயிரோவியங்களையும், புதிய நாடக இலக்கணங்களையும் கையாள வில்லை.

 *

எல்லாம் மனிதனின் நன்மைக்காக* 


சமுதாயத்தில் நாடகக் கலை வளர்ச்சிக்கு, முழுமையும் தாழ்ந்த அறிவாற்றல் நிலையினின்று உயர்த்த நிலைக்கு மாறும் மாற்றத்தினால்தான் பண்பாடு உறுதியாகின்றது. ஆனால், நாடக வளர்ச்சி என்பது, படித்துப் பட்டம் பெற்றவர் நடிப்பது மட்டு மன்று, மாந்தனின் வாழ்க்கை வளர்ச்சியைத் தடை செய்து, அவனது உழைப்பாற்றல், அறிவாற்றல், படைப்பாற்றல் ஆகிய வற்றில் அடையத் தகும் வெற்றியை முடக்குகின்ற, சமுதாயத் தளையிலிருந்து தனி மாந்தனையும், மக்கள் சமூகத்தையும் விடுவிக் கும் ஆன்மீக விடுதலையையும் அது தன்னுள் கொண்டுள்ளது.


பண்பாட்டின் முன்னேற்றம் என்பது, அனைத்து மக்களின் தலன்களையும் அதிகரித்துப் பங்கேற்கச் செய்யும் கலைக் கூறுகளே. இதில் தவறிவிட்டார் 'தமிழ் நாட்டின் சேக்குவியர்' என்றழைக் கப்பட்ட நாடகத் தந்தை சம்பந்தனார்.


தெ.பொ. இருட்டினசாமிப் பாவலர்


பம்மல் சம்பந்தனார் காலத்தவரான சதாவதானம் தெ.பொ. திருட்டினசாமிப் பாவலர் நாடகத்தைச் சமுதாய விழிப்புணர்ச் சிக்கு ஒரு கருவியாக்கினார். 'பதிபக்தி' என்ற ஒரு நாடகத்தின் மூலம் கள் குடியினால் பாழ்பட்டழியும் குடும்ப ஓவியத்தை அவர் நாடகத்தில் காட்டியுள்ளார். இவரும் பரிதிமாற் கலைஞரும், பம் மல் சம்பந்தனார் போன்று தாமே நாடக அரங்கமேறி நடித்துக் காட்டினார். காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்பும் 'கதர் பக்தி' என்ற ஒரு நாடகத்தை எழுதி, நாட்டில் விடுத ைஉணர் வுக்கு எழுச்சி ஊட்டினார். அடுத்துக் குதிரைப் பந்தயத்தால் குடும் பங்கள் கெட்டுக்குட்டிச் சுவராவதை உணர்த்தும் வகையில் நாட கம் எழுதி, நடித்து, உணர்ச்சியோடு சித்திரித்துக் காட்டினார். 'தேசிங்குராசன்'கதையை முதன் முதல் நாடகமாக்கியவர் இவரே. இவரிடம் சீர்திருத்தக் கொள்கையும், சமுதாய உணர் வும் இருந்தும்கூடப் பகுந்தறிவுப் பாங்கும், இனவுணர்வும், தென் மொழியுணர்வும் அற்றதால் இவர்தம் வாழ்நாளுக்குப் பின் இவர் நாடகங்களும் மதிப்பிழந்தன ; வலுவிழந்தன ; நலிவுற்றன. காலத்தின் எதிரொலியான அந்நாடகங்கள் நாடுவாரற்று, தேடு வாரற்றுப் போதல் தமிழர்க்கு இழப்பே.


மறைமலையடிகள் (1876-1950)


பல்லாவரம் பொதுநிலைக் கழகத் தலைவரும், தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியுமான மறைமலையடிகளார் தமிழ் ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் வல்லுநர். இவர் பன் மொழிப்புலவர் மட்டுமல்லர்; பல்துறை அறிஞர்; கல்விக் கடல். மண்இயல் முதல் விண்இயல் வரை அறிந்தவர். கலைநூல் முதல் கருநூல் வரை பலதுறைகளைக் கற்றவர். நூலாசிரியர். உரையாசிரியர், இதழாசிரியர், ஆய்வாளர், இனிய சொற்பொழி வாளர். நாட்டிற்கும் நற்றமிழ் மொழிக்கும் தன்னையே அளித்த ஈகையர். தூய செந்தமிழில் சமயம், இலக்கியம், இலக்கணம், புதினம், வரலாறு, அறிவியல், மொழியியல், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு துறையிலும் தம் பண்பட்ட அறிவுத்திறனால் நாற்பதற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். 'மறைமலை என்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க இறையும் தமிழன் வடமொழி தீத்தாழ்வின்றி வாழ இமிழும் கடல்சூழ் இகம்" என்று தேவநேயப்பாவாணரால் போற்றப்படும் றைமலை யடிகளார் வடமொழியிலிருந்து காளிதாசன் எழுதிய ''சாகுந் தலம்' நாடகத்தை மொழிபெயர்த்தும், தாமே 'அமராவதி அம்பிகாபதி' என்ற நாடகப் படைப்பிலக்கியத்தை எழுதி யும் வெளியிட்டார். அவை பயில்தோறும் இன்பம் பயக்கும் பைந்தமிழ் நடையும் பாதலமும் கொண்டிருந்தனவே தவிர,நடிப்பதற்கு ஏற்றனவாக இல்லை. நாட்டில் நற்றமிழ் பரவும் காலத்தில் இந்த நாடகங்கள் படிப்பதற்கென்றுமட்டும் அமையா மல். நடிப்பதற்குமுரிய நயஞ்சிறந்த விளங்கும். நாடகங்களாகவும் ''சாகுந்தலம்-நாடக ஆராய்ச்சி'' இவர் இயற்றியுள்ள தலை


சிறந்த ஆராய்ச்சி நூலாகும். தமிழில் நாடகளியல்பற்றியும்,


நாடக உறுப்பினர் பண்பு நலன்களைப்பற்றியும் மறைமலையடி


களார்போல் நிறைவான நூல் செய்தவர்கள் எவருமில்லை என


லாம்.


சு. கந்தசாமி முதலியார் (1874-1939)


பல்கலைக்கழக இளைஞர் பட்டம் பெற்ற பம்மல் சம்பந்த னாரின் நாடகங்களிலும், அவர் நாடக சபா வழியாக நடந்த சேக்குவியர் ஆங்கில நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்ற சிறந்த நடிகர். ௪. கந்தசாமி முதலியார் ஐந்தாம் சார்+ மன்னரின் பொற்பதக்கத்தை 1906-ல் தம் நடிப்புக்காகப் பெற் றவர். இவரதாம் முதல் முதலில் சமூகப் புதினங்களை நாடக மாக்கியவர். வடுவூர் கே. துரைசாமி. கே. பி. அரங்கராச போன்றோர் புதினங்கள் இவர் நாடகங்களால் புகழ்பெற்றன.


பழைய புராண நாடகங்களுடன், சமூகத்தின் எதிரொலி யான. 'இராசாம்பாள்' என்ற காதல் நாடகம், வரதட்சணைச் கொடுமையை விளக்கிய 'இராசேந்திரன்' நாடகம், மடாதி பதிகளின் வஞ்சகத்தைகா மக்களியாட்டங்களை வெளிப்படுத்திய ''சவுக்கடி சந்திரகாந்தா" நாடாம் போன்றவற்றை அரங் கேற்றிய சிறப்பும் இவருக்குண்டு. திரையுலகிலேயும் கதை உரை யாடல், இயக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு முப்பதாண்டுக் காலம் தமிழகத்தில் நாடக உலகிலும் திரையுலகிலும் இடம் பெற்றிருந்தார்.


தி இலக்குமணப் பிள்ளை


இசைப்புலமையும், வில்லோசைமிக்க ஒரு நல்லோசை-சொல் லோசை கொண்ட வீணையை இசைக்கும் ஆற்றலும், பாங்கால ஆங்கில ஆற்றலும், தீந்தமிழ் உணர்ச்சியும் கொண்டவர் திரு. தி.இலக்குமணப் பிள்ளை. கிரேக்க நாடகங்கள் இரண்டையும் 'இரவிவர்மன்' என்ற வரலாற்று நாடகத்தையும் நடிப்பதற்கு என்றும் படிப்பதற்கு என்றும் பயன்படும் வகையில், சேக்குவியரின் நாடகங்களை ஒத்து மயங்கிசைக் கலித்துறைப்பாளில் எழுதினார். சென்னையிலும், திருவாங்கூரிலும் 'இரவிவர்மன்' அரங்கேறியது. ஆனால் ஆசிரியர் அந்த நாளில் கையாண்ட நல்ல தமிழைப் போற்றுவாரில்லாமல், நாடக மேடையில் தோல்வியுற்றது. ஆனால், இலக்கிய மதிப்பீட்டளவில் இவரின் நாடகங்கள் தமிழில் இதுவரை வந்த பாநடை நாடகங்களில் தலைசிறந்தவையாகும். இவர் நாடகங்களில் மக்கட் சமுதாயத்தைச் சார்ந்த சிக்கல்கள், பீணக்குகள் அமையாதது ஒரு குறையாகும்.


தம் காலத்து அரசியல் வாழ்க்கையையோ, சமூக வாழ்க்கை யையோ நிலைக்களனாகக் கொள்ளாமல் எக்காலத்துக்கும் மாறா அறவொழுக்கங்களையும் பண்புகளையும் காட்ட எண்ணிய திரு இலக்குமணப்பிள்ளையை, ஏனோ தமிழக நாடகமேடையும், கேரள நாடகமேடையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை அவரின் நாடகத் திறனை உணர்ந்து தமிழகம் ஏற்றிப் போற்றியிருக்குமானால் திரு. இலக்குமணப்பிள்ளை ஈடு இணையற்ற இந்திய நாடக ஆசிரியர்களின் தலைமணியாய் விளங்கியிருப்பார்.


தமிழ் நாட்டில் நீண்டநெடுங் காலமாய் நாடகக் சலை, இருக்கும் நிலைமாற்றி எழுச்சியுண்டாக்கவில்லையானாலும் அது, நல்லறத்தை ஒழுக்கக் கோட்பாட்டைக் கற்பித்து வந்தது. ஒரு மதிப்புணர்ச்சி யையும் நாடகமும் நாடக மேடையும் தந்தன.


பழைய நாடகக்கலை பிற்போக்கு எண்ணங்களாலும் சாதி, மத வேறுபாடுகளாலும், பின்னர் ஒருசிலரின் வணிக மனப்பாள் மையாலும், தமிழகத்தில் வாழ்ந்த உண்மை நடிகர்களின் ஏழ்மை யினாலும் வறுமையினாலும் சிறுகச்சிறுக செல்லரித்துக்கொண்டு வந்தது.


தங்கள் வாழ்வையே நாடகக் கலைக்கு முதலீடாக்கி, காவியச் சிறப்பும், உள்ளங் கவரும் கற்பனைச் சுவையும், இசையுணர்ச்சி யும், மக்கள் பண்பைப் பக்குவப்படுத்தும் உரையாடலும் நிரம்பிய எண்ணற்ற நாடகங்களை இவர்கள் ஈந்தனர் என்றாலும், ஒரு குவளைப் பாலுக்குச் சுவை கூட்டும் ஒரு தேக்கரண்டி சருக்கரைக்கு ஏங்குவது போல, காலம் மற்றொரு நாடகக் கலைஞனை எதிர் நோக்கியது.



அண்ணா ஒரு நாடக அறிஞர் அவர் கலை நயமும் - கருத்து வளமும்


டாக்டர் இரா சனார்த்தனம்.

தங்கூரம் வெளியீடு

உலகத் தமிழர் இல்லம்

12. மாண்டித்சந்து

எழும்பூர்,

சென்னை-600 008.

முதல் பதிப்பு 15 .10. 1974

இரண்டாம் பதிப்பு 1.1.1978

கம்பராமாயணம் - ஆரண்யகாண்டம் - சடாயு உயிர் நீத்த படலம்

 

கம்பராமாயணம்

சடாயு உயிர் நீத்த படலம்

                        விழுமியம் - அறநெறி

இராமாயணம் அறிமுகம்

இராமனது வரலாற்றைக் கூறும் நூல் இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நூல் குலோத்துங்கசோழனின் ஆணைப்படி கம்பர் எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்களான இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார்.

தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் இராமவதாரம் என்றே பெயரிட்டிருந்தார். ஆனால் இராமாயணம் பலரால் இயற்றப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது. கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. 

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் "தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர்.

காப்பிய காலம்

கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களையும், கம்பரின் வாழ்வினையும் கொண்டு கம்ப இராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலர் கம்பராமாயணம் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது, பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். வையாபுரிப் பிள்ளை என்பவர் கம்பர் தனியன்கள் என்பதினை 16ம் நூற்றாண்டில் சிலர் புகுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார். இந்த கம்பர் தனியன்களில் பதினேழு பாடல்கள் உள்ளன. அவற்றில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழில் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இதனைக் கொண்டு கிபி 885ல் இராமாயணம் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்கின்றனர்.

மா. இராசமாணிக்கனார் கி.பி. 1325க்கும் முன்பே கம்பராமாயணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கன்னட நாட்டில் உள்ள கல்வெட்டினைக் கொண்டு குறிப்பிடுகிறார். எனினும் இறுதியாக கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனோடு மாறுபட்டு தற்போதைய ஆந்திராவில் இருக்கும் ஓரங்கல் எனும் பகுதியில் தங்கியிருக்கிறார்.[2] அப்போது அவ்விடத்தில் இருந்த அரசன் பிரதாபருத்திரன் என்பவராவார். அவருடைய காலம் கிபி 1162 - 1197 ஆகும். இதனால் கம்பர் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கம்பராமாயணத்தினை இயற்றியுள்ளார்.

அமைப்பு

கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,500 பாடல்களையும் கொண்டவை.

வ.எண்

காண்டங்களின் பெயர்

படல எண்ணிக்கை

1

பாலகாண்டம்

24

2

அயோத்தியா காண்டம்

13

3

ஆரண்ய காண்டம்

13

4

கிட்கிந்தா காண்டம்

17

5

சுந்தர காண்டம்

14

6

யுத்த காண்டம்

42

 

சடாயு உயிர் நீத்த படலம் - கதைச்சுருக்கம்

மாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்துஇறுதியில் அவனது சந்திரகாசமெனும் தெய்வ வாளால் சிறகு அறுபட்டு விழுந்தான்.

 அவன் அப்போது    இறக்கவில்லைஇராம இலக்குவருக்குச் செய்தி அறிவிக்க உயிர் தாங்கி இருந்தான். இச் செய்தியை அவன் இராம இலக்குவருக்குக் கூறிய பின்னர்த் தன் உயிரை விட்டான். தந்தையின் நண்பனுக்குத் தசரத ராமன் மாளாத சோகப் புலம்பலுடன் நீர்க் கடன் செய்தான் என்ற செய்திகள் இப்படலம் கூறுவதால்இது சடாயு உயிர் நீத்த படலம் என்று பெயர் பெற்றது. "சடாயு மோட்சப் படலம்" "சடாயு வதைப்படலம்" என்றும் குறிப்பிடுவதுண்டு.

 இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது அவள் இரக்கமில் அரக்கர்க்கு குற்றம் எதுபழிதான் எது என்று கலங்கினாள். அவ்வபயச் சொல் கேட்ட சடாயு "எங்கடா போவது எங்கே" என எதிர் வந்து இராவணனைத் தடுத்தான். இருவருக்கும் போர் மூண்டது சடாயு இராவணனது கொடிகுண்டலம்திருமுடிகவசம்வில் முதலியவற்றையும் தேரையும்தேர்ப்பாகனையும் சிதைத்து அழித்தான். சினம் கொண்ட இராவணன் மாற்றருந் தெய்வ வாளால் சடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். சீதை அது கண்டு புலம்பித் துன்புற்றாள். அரக்கன் சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்று தொடற்கரும் அரக்கியர் காவல் நடுவே வைத்தான்.      'பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் நிற்றியோ இளையோய்என வைதேகி வைத வார்த்தையை மனத்தில் தேக்கிஇலக்குவன் இராமபிரானைத் தேடிச் சென்றான். தமையனைக் கண்டு தான் வந்த காரணத்தைச் சொன்னான். இருவரும் சீதை இருந்த பர்ண சாலை நோக்கி விரைந்து வந்தனர். உடல் இருக்க உயிர் பிரிந்தது போல் பர்ணசாலை இருந்த இடத்தையும் சானகி இல்லாமையையும் கண்டனர். இருவரும் அவளைத் தேடிச் சென்றனர். அவ்வழியில் கொடிவில்கவசம் முதலியன விழுந்து கிடத்தல் கண்டுஅதைத் தொடர்ந்து சென்று இறுதியில் சடாயு விழுந்து கிடந்த இடம் வந்தனர். இராமன் பலவாறு புலம்புதலைக் கேட்ட குற்றுயிராகக் கிடந்த சடாயு நடந்ததையெல்லாம் ஒருவாறு கூறி உயிர் நீத்தான். இராமன் சோகம் மிகக்கொண்டு புலம்பினான். அவனை இலக்குவன் தேற்றினான். இறுதியில் இராமன் சடாயுவுக்கு நீர்க்கடன் செய்து முடித்த போது சூரியன் மறைந்தது. இவையே இப்படலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஆகும்.

சடாயு உயிர் நீத்த படலம் 


                         சடாயு தடுத்தது 

என்னும் அவ் வேலையின்கண், 'எங்கு அடா போவது?' என்னா,

'நில் நில்என்றுஇடித்த சொல்லன்நெருப்பு இடைப் பரப்பும் கண்ணன்

மின் என விளங்கும் வீரத் துண்டத்தன்மேரு என்னும்

பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்; 3503

தன்னைக் கவர்ந்து செல்லும் இராவணனிடம் சீதை பழித்துரைத்துக்கொண்டிருந்தபோதுசடாயு தோன்றி,

நீ எங்கேயடா செல்கிறாய்நில்! நில்! என இடி இடித்தது போன்ற சொற்களையுடையவனாககோபத் தீப்பொறிகளுக்கிடையில் விரித்த கண்களையுடையவனாகமின்னலைப் போன்ற ஒளியுடன் விளங்கும் வீரமிக்க அலகுடையவனாக மேரு மலை வான்வழியே வருவது போல விண்ணில் பறந்து வரும் பொன்போன்ற உடம்பையுடையவனாக,

பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்துஎழுந்துஒன்றோடு ஒன்று

பூழியின் உதிரவிண்ணில் புடைத்துஉறக் கிளர்ந்து பொங்கி,

ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதரமுழுதும் வீசும்

ஊழி வெங் காற்று இது என்னஇரு சிறை ஊதை மோத. 3504

பெரிய வலிமையான மலைகள் எல்லாம் புழுதிபோலத் துகளாய் உதிருமாறு விண்ணில் ஒன்றோடு ஒன்று தாக்கவும்கடலும் மேலெழுந்து பொங்கிக் கடலும் உலகமும் ஒன்றாகி அழியவும்உலக முழுவதும் வீசுகின்ற ஊழிக் காலத்துக் கடுங்காற்று இது என்று சொல்லுமாறு தன் இரு சிறுகுகளின் காற்று மோதியது.

சாகை வன் தலையொடு மரமும் தாழமேல்

மேகமும் விண்ணின் மீச்செல்ல, 'மீமிசை

மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான்என,

நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே. - 3505

  சடாயுவின் சிறகில் இருந்து வரும் பெருங்காற்றால் மரங்கள் கிளைகளோடும் விழவும்வானத்தில் செல்லும்  மேகம் மேலும் மேலே செல்லவும்கருடன் வருகின்றான் எனப்பாம்புகள் படத்தை ஒடுக்கிக்கொண்டு வருந்தின.

யானையும்யாளியும்முதல யாவையும்,

கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை

மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால்,

வானமும் கானமும் மாறு கொள்ளவே. 3506

யானை யாளி முதலிய மிருகங்களும் காட்டில் உள்ள மரங்களும்புதர்களும்கற்களும் சடாயுவின் இரு சிறகுகள் வீசும்காற்றின் வேகத்தால் நிலை கெட்டு ஆகாயமும் காடுகளும் ஒன்றொடு ஒன்று மாறு கொண்டு நின்றன

'உத்தமன் தேவியைஉலகொடு ஓங்கு தேர்

வைத்தனை! ஏகுவது எங்குவானினோடு

இத்தனை திசையையும் மறைப்பென்ஈண்டுஎனா,

பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான்; 3507

       'உத்தமன் தேவியை உலகொடு பெயர்த்துக் கொண்டு தேரில்வைத்து நீ போவது எங்கேஎன்று கூறிதான் வானையும் திசைகளையும் இப்போதே மறைப்பவன் போலத் தன் பாதுகாப்பான சிறகுகளை விரித்தபடி சடாயு வந்தான்.

வந்தனன்-எருவையின் மன்னன்மாண்பு இலான்

எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்;

சிந்துரக் கால்சிரம்செக்கர் சூடிய

கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான். - 3508

     சடாயு இராவணனின்  இயந்திரத் தேர் செல்லுதலைத் தடுக்கும் எண்ணத்துடன் சிவந்த கால்களோடும் தலையோடும் செவ்வானத்தின் நிறத்தைக் கொண்ட கழுத்தினையும் உடையவனாகி கைலாய மலையை போன்ற தோற்றத்தோடும் இராவணன் எதிரில் வந்தனன்

ஆண்டு உற்ற அவ் அணங்கினை, 'அஞ்சல்எனா,

தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான்,

மூண்டுற்று எழு வெங் கதம் முற்றிலனாய்,

மீண்டுற்று உரையாடலை மேயினனால்; - 3509

   சீதையிடம் 'அஞ்சவேண்டாம்என அபயம் கூறிய சடாயுஇராவணன் அவளைத் தீண்டவில்லை என்பதை உணர்ந்து சினத்தை அடக்கிக் கொண்டு அவனை நோக்கிப் பேசத் தொடங்கினான்.

சடாயுவின் அறிவுரை

'கெட்டாய் கிளையோடும்நின் வாழ்வை எலாம்

சுட்டாய்இது என்னை தொடங்கினைநீ

பட்டாய் எனவே கொடு பத்தினியை

விட்டு ஏகுதியால்விளிகின்றிலையால். 3510

       உன் இனத்தோடு உன் செல்வ வாழ்வையெல்லாம் சுட்டொழித்தாய்! இத்தகைய தீச்செயலை ஏன் செய்யத் தொடங்கினாய்கற்புடைய சீதையை விட்டுச்செல். அவ்வாறு விட்டால் அழிய மாட்டாய்..

'பேதாய்! பிழை செய்தனைபேர் உலகின்

மாதா அனையாளை மனக்கொடுநீ

யாது ஆக நினைத்தனைஎண்ணம் இலாய்?

ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? - 3511

   அறிவற்றவனே பிழை செய்துவிட்டாய்! பொிய உலகினுக்குத் தாய் போன்றவளாகிய சீதையை மனதில் கொண்டு நீ இந்த இழிந்த நிலையை நினைத்தாய்சிந்தனையில்லாதவனேஇனி உனக்குப் பற்றுக்கோடாய் நின்று காப்பாற்றுபவர்கள் யாரும் இல்லை.

'உய்யாமல் மலைந்துஉமர் ஆர் உயிரை

மெய்யாக இராமன் விருந்திடவே,

கை ஆர முகந்து கொடுஅந்தகனார்,

ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ? 3512

       உம் இனத்தவராகிய கரதூடணர் முதலோர் ஒருவரும் பிழைக்காதவாறுஇராமன் போர் செய்துஅவர்களின் அரிய உயிரை மெய்யாகவே விருந்துணவாக அளிக்க எமன் வாரிக்கொண்டு புதிதாக உண்ட செய்தியை அவர்கள் தலைவனான நீ அறியவில்லையோ

சாடாயு உரையாடல்

'கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல்

விடும் உண்டை கடாவ விரும்பினையே?

அடும் என்பது உணர்ந்திலை ஆயினும்வன்

கடு உண்டுஉயிரின் நிலை காணுதியால்! - 3513

உன் செயல் சினம் கொண்டு கொல்ல வரும் யானையின் மீது மண்ணுருண்டையை வீசுவது போலவும்வலிமையான கொல்லும் தன்மை உள்ள நஞ்சு கொல்லும் என்பதை உணராமல் அதை உண்டு உயிர் பிழைக்கலாம் என எண்ணுவது போலவும் உள்ளது

'எல்லா உலகங்களும்இந்திரனும்,

அல்லாதவர் மூவரும்அந்தகனும்,

புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;

வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ? - 3514

      மூன்று உலகத்தில் உள்ளவர்களனைவரும்அவர்களுக்குத் தலைவனான இந்திரனும்அவனல்லாத அயன்அரிஅரன் என்ற மூவரும் எமனும் இராமனையும்இலக்குவனையும் கண்டால் புல் தின்னும் மான் புலியைக் கண்டு அஞ்சுவது போல அஞ்சுவார்களே அல்லாமல் அந்த வில்வீரனான இராமனை வெல்லும் வல்லமை உடையவரோ.

'இம்மைக்குஉறவோடும் இறந்தழியும்

வெம்மைத் தொழில்இங்குஇதன்மேல் இலையால்;

அம்மைக்குஅரு மா நரகம் தருமால்;

எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினைநீ? - 3515

   இப்பிறவியில் உறவினருடன் இறந்துபடவும் மறுமையில் பொறுத்தற்கரிய நரகினை அடையவும் உரிய பிறர் மனை நயத்தலாகிய இத் தீச் செயலை எப்பிறவிக்கு நன்மை தரும் எனக் கருதி நீ செய்தாய்

'முத் தேவரின் மூல முதற் பொருள் ஆம்

அத் தேவர் இம் மானிடர்ஆதலினால்,

எத் தேவரோடு எண்ணுவதுஎண்ணம் இலாய்!

பித்தேறினை ஆதல் பிழைத்தனையால். - 3516

   இம்மானிடர் முத்தேவருக்கும் மூலமுதலானவர்ஆதலால் இவரை எத் தேவரொடு எண்ணுவது. நீ பித்தேறினை ஆதலால் இக்குற்றம் செய்தாய்.

'புரம் பற்றிய போர் விடையோன் அருளால்

வரம் பெற்றவும்மற்று உள விஞ்சைகளும்,

உரம் பெற்றன ஆவன-உண்மையினோன்

சரம் பற்றிய சாபம் விடும் தனையே. - 3517

      திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் அருளால் நீ பெற்றுள்ள வரமும் மற்றும் உன்னிடம் உள்ள மாயப் போர் ஆற்றலும் உண்மையினோன் வில்லில் அம்பு கோத்து விடும் அளவே நிற்கும்,

'வான் ஆள்பவன் மைந்தன்வளைத்த விலான்,

தானே வரின்நின்று தடுப்பு அரிதால்;

நானே அவண் உய்ப்பென்இந் நன்னுதலை;

போநீ கடிதுஎன்று புகன்றிடலும். -3518

விண்ணுலகில் சிறப்புடன் வாழும் தசரதன் மைந்தன் இராமன் வந்தால் நீ தப்ப முடியாது எனவே இப்பொழுதே சீதையை என்னிடம் விட்டு விட்டுநீ போய் விடுநான் அவளை முன்பு இருந்த இடத்திலேயே சேர்த்து விடுகிறேன் என இராவணனிடம் சடாயு கூறினான்.

 

இராவணன் மறுப்புரை

கேட்டான் நிருதர்க்கு இறைகேழ் கிளர் தன்

வாள் தாரை நெருப்பு உகவாய் மடியா,

'ஓட்டாய்இனி நீ உரை செய்குநரைக்

காட்டாய் கடிதுஎன்றுகனன்று உரையா. -3519

      சடாயுவின் சொல் கேட்ட இராவணன் கண்கள் சிவந்து வாய் மடித்து, 'இனி மேல் பேச வேண்டாம். நீ கூறிவர்களைக் காட்டுஎன்று சினந்து சொன்னான். 

'வரும் புண்டரம்! வாளி உன் மார்பு உருவிப்

பெரும் புண் திறவாவகை பேருதி நீ;

இரும்பு உண்ட நீர் மீளினும்என்னுழையின்

கரும்பு உண்ட சொல் மீள்கிலள்காணுதியால்'. -3520

என்னை எதிர்த்து வரும் கழுகே உன் மார்பினை என் அம்பு ஊடுருவிப் பெரும் புண்ணை உண்டாக்குவதற்கு முன்பே நீ வேறோர் இடம் செல்க. நெருப்பில் காய்ந்த இரும்பு உட்கொண்ட நீர் மீண்டு வெளிப்பட்டாலும்கரும்பு போன்ற இனிய சொல்லுடைய இவள் என்னிடமிருந்து மீண்டுவர மாட்டாள் என நீ அறிவாயாக.

அஞ்சிய சீதையிடம் சடாயு அஞ்சவேண்டாம் என்றான்

என்னும் அளவில்பயம் முன்னின் இரட்டி எய்த,

அன்னம் அயர்கின்றது நோக்கி, 'அரக்கன் ஆக்கை

சின்னம் உறும் இப்பொழுதே; 'சிலை ஏந்திநங்கள்

மன்னன் மகன் வந்திலன்என்றுவருந்தல்அன்னை! -3521

     இராவணன் விடேன் என்று கூறியதைக் கேட்ட சீதை முன்பைவிட இரு மடங்கு வருந்துவதைப் பார்த்த சடாயு. இப்பொழுதே அரக்கன் உடல் துண்டுகள் ஆகும். மன்னன் மகன் வில்லேந்திக்காக்க வரவில்லையே என்று வருந்தாதே என ஆறுதல் கூறினான்.

'முத்து உக்கனபோல் முகத்து ஆலி முலைக்கண் வீழ,

தத்துற்றுஅயரேல்தலைதால பலத்தின் ஏலும்

கொத்து ஒப்பன கொண்டுஇவன் கொண்டன என்ற ஆசை

பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்திஎன்றான். - 3522

      சீதை அழுது கணணீர் விடுதல் கண்ட சடாயு, 'நீ மனந்தளராதே பனம்பழக் கொத்துப் போல் உள்ள இராவணனின் பத்துத் தலைகளையும் அவன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகின்ற பத்துத் திசைகளுக்கும் நான் பலியாகக் கொடுக்கப் போவதைப் பார்ப்பாயாகஎன ஆறுதல்கூறினான். 

சடாயு - இராவணன் போர்

இடிப்பு ஒத்த முழக்கின்இருஞ் சிறை வீசி எற்றி,

முடிப் பத்திகளைப் படி இட்டுமுழங்கு துண்டம்

கடிப்பக் கடிது உற்றவன்காண்தகும் நீண்ட வீணைக்

கொடிப் பற்றி ஒடித்துஉயர் வானவர் ஆசி கொண்டான். - 3523

     சடாயு இடியோசை போன்ற முழக்கத்துடன் பெரிய சிறகுகளை வீசி மோதிஇராவணனின் தலையில் அணிந்த முடிவரிசைகளை நிலத்தில் தள்ளவிட்டு முழக்கம் செய்து அலகால் கொத்த விரைந்தான். அவனது வீணைக் கொடியை ஒடித்து வானவர் ஆசி கொண்டான் சடாயு.

அக் காலைஅரக்கன்அரக்கு உருக்கு அன்ன கண்ணன்,

எக் காலமும்இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான்

நக்கான்உலகு ஏழும் நடுங்கிடநாகம் அன்ன

கைக் கார் முகத்தோடு கடைப் புருவம் குனித்தான். - 3524

   இதற்கு முன் எப்போதும் இது போல் தன் பெருமை கெடாத இராவணன் கோபம் கொண்டு சிரித்துத் தன் வில்லையும் புருவத்தையும் வளைத்தான்.

 

சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி

மண்டசிறகால் அடித்தான் சிலவள் உகீரால்

கண்டப்படுத்தான் சிலகாலனும் காண உட்கும்

துண்டப் படையால்சிலை துண்ட துண்டங்கள் கண்டான். - 3525

     பிறை நிலவு போன்ற பற்களை உடைய இராவணன் தன்மீது பொழிந்த அம்பு மழையைச் சடாயு சிறகாலும்கூர்மையான கால்நகத்தாலும்,இராவணனது வில்லைத் தன் மூக்காலும் துண்டுதுண்டுகளாக ஆக்கினான்.

மீட்டும் அணுகா,-நெடு வெங் கண் அனந்த நாகம்

வாட்டும் கலுழன் எனவன் தலை பத்தின் மீதும்

நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் - சேம வில் கால்

கோட்டும் அளவில்மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான். -3526

பாம்புகளை வாட்டும் கருடன் போல் வந்து இராவணனது தலையைத் தரையில் உருட்டத் தன் நெடு மூக்கு எனும் சக்கரப்படையை நீட்டிய சடாயு,அவன் சேம வில்லை வளைப்பதற்குள் விரைந்து வந்து அவன் காதில் உள்ள குண்டலங்களைப் பறித்துச்சென்றான்

எழுந்தான் தட மார்பினில்ஏழினொடு ஏழு வாளி

அழுந்தாது கழன்றிடப் பெய்துஎடுத்து ஆர்த்துஅரக்கன்

பொழிந்தான்புகர் வாளிகள் மீளவும்; 'போர்ச் சடாயு

விழுந்தான்எனஅஞ்சினர்,விண்ணவர் வெய்து உயிர்த்தார். 3527

       தன் குண்டலங்களைப் பறித்து எழுந்த சடாயுவின் மார்பில் பதினான்கு அம்புகளை எய்தான் இராவணன்அந்த அம்புகள் சடாயுவின் மார்பைத் துளைக்காமல் கழன்று வீழ்ந்தன. மேலும் அம்புகளைச் சடாயு மீது சொரிந்ததைக் கண்டு சடாயு விழுந்தான் என எண்ணித் தேவர்கள் பெருமூச்சு விட்டனர்.

புண்ணின் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன்,

மண்ணில்கரனே முதலோர் உதிரத்தின் வாரிக்-

கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்றுமீள

விண்ணில் பொலிகின்றது ஓர் வெண் நிற மேகம் ஒத்தான். -3528

புண்ணிலிருந்து புதிய இரத்தம் வழிய கழுகின் வேந்தனான சடாயுதரையில் கரன் முதலிய அரக்கரின் இரத்த வெள்ளத்தைக் கடல் என விரும்பி உண்டதுபோல காட்சியளித்தான். ஒரு வெண்ணிற மேகம் போலக் காட்சியளித்தான் சடாயு.

ஒத்தான் உடனே உயிர்த்தான்உருத்தான்அவன் தோள்

பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்திமூக்கால்

கொத்தாநகத்தால் குடையாசிறையால் புடையா,

முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான். -3529

அம்புபட்ட சடாயுஉயிர்த்துஉருத்துஇருபது தோள்களில் ஏறி,கொத்திக் குடைந்து புடைத்து அவனது மார்பில் விளங்குகிற கவசத்தின் மூட்டுவாய் அறும்படி செய்தான் என்க.

அறுத்தானைஅரக்கனும்ஐம்பதொடு ஐம்பது அம்பு

செறித்தான் தட மார்பில்செறித்தலும்தேவர் அஞ்சி

வெறித்தார்வெறியாமுன்இராவணன் வில்லைப் பல்லால்

பறித்தான் பறவைக்கு இறை,விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. -3530

   தன் கவசத்தைப் பிளந்த சடாயுவின் மீது இராவணன் நூறு அம்புகளை எய்தான். அது கண்டு வானவர் திகைத்தனர். உடனே சடாயு பாய்ந்து தேவர்கள் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய அவனது வில்லைப் பறித்தான்.

எல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்புஈசனோடும்,

மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி,

வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான் -

சொல் இட்டு அவன் தோள்வலியார்உளர் சொல்லவல்லார்?-3531

      வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளிய தோள்வலி உடைய இராவணனது வில்லைப் பறித்து வாயில் கவ்விக்கொண்டு வானில் நீண்ட மேகம் போல் விளங்கிய சடாயுவின் தோளாற்றலைச் சொற்களால் யாரால் சொல்ல முடியும்முடியாது.

மீளா நிறத்து ஆயிரங் கண்ணவன் விண்ணின் ஓட,

வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி,

தாளால் இறுத்தான் - தழல் வண்ணன் தடக் கை வில்லைத்

தோளால் இறுத்தான் துணைத் தாதைதன் அன்பின் தோழன். -3532

     இராவணனது வில்லை அலகால் கௌவிப் பிடுங்கிய சடாயு அதைத் தன் தாளால் இறுத்தான் என்க. சிவன் வில்லைக் கையால் ஒடித்தவனாகிய இராமனுக்குத் துணைவனும்தசரதன் தோழனும் ஆகிய சடாயு இராவணன் வில்லைக் காலால் ஒடித்தான் 

போர் - தொடர்ச்சி

ஞாலம் படுப்பான்தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில்

மூலம் ஒடிப்புண்டது கண்டுமுனிந்த நெஞ்சன்,

ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும்

சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான்மறம் தோற்றிலாதான். -3533

     இராவணன் தனது வலிய வில் சடாயுவால் ஒடிக்கப்பட்டது. கண்டு முனிவு கொண்டுநீலகண்டன் முப்புரம் எரிக்கக் கைக்கொண்ட திருமாலாகிய அம்பு போன்ற சூலத்தை எடுத்துச் சடாயுவின் மீது எறிந்தான்

'ஆற்றான் இவன் என்று உணராதுஎனது ஆற்றல் காண்என்று

ஏற்றான் எருவைக்கு இறைமுத்தலை எஃகம்மார்பில்;

மேல் தான் இது செய்பவர் யார்?' எனவிண்ணுளோர்கள்

தோற்றாது நின்றார்தம் தோள்புடை கொட்டி ஆர்த்தார். -3534

சடாயு இராவணனை நோக்கி 'இவன் நம் சூலத்துக்கு ஆற்றான்என எண்ணாதே என் வலிமையைக் காண்பாயாக என்று சொல்லி அவன் வீசிய முத்தலைச் சூலத்தை மார்பில் ஏற்றுக் கொண்டான். அது கண்டு இவ்வீரச் செயல் செய்பவர் யாருளர் எனத் தேவர்கள் மகிழ்ந்து தோள் கொட்டிப் பேரொலி செய்தனர். 

பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புன்கணோரும்

இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும்,

தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த

மென் நோக்கியர் நோக்கமும்ஆம் என மீண்டது அவ் வேல். - 3535

        பொருளை நோக்கி அன்பு செலுத்துகின்ற பொருட் பெண்களிடம் ஐம்புல இன்பத்தைத் துய்க்கக் கருதிச் சென்ற வறியவரும்இனிய பார்வையுடைய கணவன் மனைவியர் இல்லாத வீட்டிற்குச் சென்ற நல்ல விருந்தினரும்இறைவனையே நோக்கிய உள்ளத்துடைய யோகியரைச் சார்ந்த மெல்லிய நோக்கமுடைய பெண்களின் காதல் நோக்கமும் உவமையாகச் சொல்லுமாறு அச்சூலவேல் சடாயுவின் மார்பில் நுழையும் வலிமையின்றித் திரும்பியது.

வேகமுடன்வேல இழந்தான் படை வேறு எடாமுன்,

மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப்

பாகம் தலையைப் பறித்துபடர் கற்பினாள்பால்

மோகம் படைத்தான் உளைவு எய்தமுகத்து எறிந்தான். -3536

          வேலை வெறுமனே போக்கிய இராவணன் வேறு படை  எடுக்கும் முன் சடாயு பாய்ந்து தாக்கித் தேர்ப்பாகனது தலையைக் கொய்து அதை அவன் முகத்தில் வீசினான். 

எறிந்தான் தனை நோக்கிஇராவணன்நெஞ்சின் ஆற்றல்

அறிந்தான்முனிந்துஆண்டது ஓர் ஆடகத் தண்டு வாங்கி,

பொறிந்தாங்கு எரியின் சிகை பொங்கி எழபுடைத்தான்;

மறிந்தான் எருவைக்கு இறைமால் வரை போல மண்மேல். 3537

       தேர்ப்பாகனது தலையைப் பறித்துத் தன் முகத்தின் மீது எறிந்த
சடாயுவினது மன வலிமையை இராவணன் அறிந்து சினந்து பொன்னால் ஆகிய பெரிய கதையைக் கையில் கொண்டு நெருப்புப்பொறி பறக்க அடித்தான். அதனால் சடாயு பெரிய மலை போல் மண்மீது விழுந்தான்.

மண்மேல் விழுந்தான் விழலோடும்வயங்கு மான் தேர்

கண்மேல் ஒளியும் தொடராவகைதான் கடாவி,

விண்மேல் எழுந்தான்எழ மெல்லியலாளும்வெந் தீ

புண்மேல் நுழையத் துடிக்கின்றனள்போல்புரண்டாள். 3538

இராவணனிடம் அடி வாங்கிய சடாயு நிலத்தில் விழுந்தவுடன் அவன் தன் தேரை விரைவாக வானத்தில் செலுத்திக் கொண்டு இலங்கையை நோக்கிப் போகப் புறப்பட்டான். அது கண்டு சீதைபுண்ணில் தீ நுழைந்தது போல் துன்புற்று வருந்திப் புரண்டாள்.

கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான்;

'அழுந்தேல் அவலத்திடைஅஞ்சலை அன்னம்!என்னா,

எழுந்தான்உயிர்த்தான்; 'அட! எங்கு இனிப் போவது?' என்னா,

விழுந்தான் அவன் தேர் மிசைவிண்ணவர் பண்ணை ஆர்ப்ப. -3539

     மென்மைத் தன்மை உடைய கொழுந்து போன்ற சீதை வருந்துதலைக் கண்ட சடாயு 'அன்னம்அஞ்சி வருந்தாதேஎன ஆறுதல் கூறி இராவணனைப் பார்த்து 'அடே நீ எங்கே தப்பிச்செல்வதுஎன்று கூறிவிண்ணவர் பண்ணை ஆர்ப்பத் தேர்மீது பாய்ந்தான். 

பாய்ந்தான்அவன் பல் மணித் தண்டு பறித்து எறிந்தான்;

எய்ந்து ஆர் கதித் தேர்ப் பரி எட்டினொடு எட்டும் எஞ்சித்

தீய்ந்து ஆசு அற வீசிஅத் திண் திறல் துண்ட வாளால்

காய்ந்தான்கவர்ந்தான் உயிர்காலனும் கைவிதிர்த்தான். -3540

    இராவணன் மேல் பாய்ந்த சடாயு தன்னைத் தாக்கிய தண்டாயுதத்தைப் பறித்து எறிந்துமிக்க சினத்துடன் இராவணனது தேரில் பூட்டப்பட்டிருந்த பதினாறு குதிரைகளையும் அலகு என்ற வாளால் அழித்தான். அது கண்டு எமனும் அச்சத்தால் நடுங்கினான்.

திண் தேர் அழித்துஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி

விண்தான் மறைப்பச் செறிகின்றனவில் இலாமை,

மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின்வச்சைமாக்கள்

பண்டாரம் ஒக்கின்றனவள் உகிரால் பறித்தான். -3541

       சடாயு இராவணனது தேரை அழித்துஅவனது முதுகுப் புறத்தில் கட்டியுள்ள அம்பாறத் தூணியையும் பறித்து எறிந்தான். கொடைக் குணமற்ற உலோபிகளின் கருவூலத்தில் பணம் இருந்தும் பிறர்க்குப் பயன்படாதவாறு போல இராவணன் கையில் வில் இலாமையால் அவனது அம்பறாத் தூணியில் அம்பு இருந்தும் அது பயன்படவில்லை

மாச் சிச்சிரல் பாய்ந்தெனமார்பினும் தோள்கள்மேலும்

ஓச்சிசிறகால் புடைத்தான்உலையா விழுந்து

மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்;

'போச்சுஇத்தனை போலும் நின் ஆற்றல்?' எனப் புகன்றான். -3542

          மாச்சிரல் பாய்வது போல் பாய்ந்து சடாயு இராவணனது மார்பிலும் தோளிலும் தன் சிறகால் ஓங்கிப் புடைத்தான். அதனால் இராவணன் மூச்சற்றுத் தலை சாய்த்து மயங்கினான்அது கண்ட சடாயு 'இது தானா உன் வலிமைஎன இகழ்ந்து கூறினான். 

சடாயு வீழ்தல்



அவ் வேலையினே முனிந்தான்முனிந்து ஆற்றலன்அவ்

வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான்;

'இவ் வேலையினேஇவன் இன் உயிர் உண்பென்என்னா,

செவ்வேபிழையா நெடு வாள் உறை தீர்த்துஎறிந்தான். -3543

        அப்போது அந்தக் கொடிய வேலைத் தாங்கியிருந்த இராவணன்சடாயு சொன்ன சொல்லைத் தாங்கமாட்டாதவனாக கோபம்கொண்டான். அப்போது சடாயுவைத் தாக்குவதற்கு வேறு ஆயுதங்கள் இல்லாததால் தப்பாமல் தாக்கக்கூடிய நீண்ட வாளை உறையிலிருந்து எடுத்து இக்கணத்திலே இவனுடைய இனிய உயிரை உண்பேன் என்று சடாயுவுக்கு நேராக வீசினானன்சந்திரகாசம் என்ற வாள் கைலாயத்தைத்தூக்க முயன்ற சிவன் வழங்கியது.

வலியின் தலை தோற்றிலன்மாற்ற அருந் தெய்வ வாளால்

நலியும் தலை என்றது அன்றியும்வாழ்க்கை நாளும்

மெலியும் கடை சென்றுளதுஆகலின்விண்ணின் வேந்தன்

குலிசம் எறியச் சிறை அற்றது ஓர் குன்றின்வீழ்ந்தான். - 3544

        சடாயு தன் வலிமையில் இராவணனுக்குத் தோற்றுவிடவில்லை. யாராலும் மாற்ற இயலாத தெய்வத்தன்மை வாய்ந்த சிவன் வாளால் எத்தகு வலிமையுடையவரும் அழிவர். சடாயுவை அழித்தது வாளின் சிறப்பே அன்றி இராவணனின் வலிமை அல்ல. மேலும் சடாயுவின் வயது எண்ணரும் பருவங்கள் கடந்து முதிர்ந்து முடியும் காலம் நெருங்கி விட்டதாலும்விண்ணுலகத்திற்கு வேந்தனான இந்திரன் வச்சிரப்படை வீசச் சிறகுகள் அற்ற ஒரு மலைபோல் வீழ்ந்தான்.

 

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...