Saturday, September 18, 2021

நாடகத்தில் விழிப்புணர்ச்சி - டாக்டர் இரா. சனார்த்தனம்.

 3. நாடகத்தில் விழிப்புணர்ச்சி


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம்.

நூற்றாண்டின் தொடக்கத்திலும்தான் நாடகக் கலை, எழுத்திலும்

அரங்கிலும், பழைய இலைகளை உதிர்த்துவிட்டு, புதிய தளிர்களைக் காட்டும். இளவேனில் இன்பம்போல புதுமை கொண்டது.


அறிவொளி சிறந்த கற்றறிந்த அறிஞர்கள் அழிந்து கிடந்த நாடக அரங்கத்தின் நெறியொளியாகவும் தனியொளியாகவும் விளங்கினர்.


 *பேராசிரியர் சுந்தரம் பிள்ளை* 


மஞ்சள் நீராடி, மலர் சூடி பொன் அணி பூண்டு, கண்கவர் வண்ணச் சேலையணிந்தும் கணவன் அன்புபெறாத பெண்போல் இருந்த தமிழ் நாடகம், கணவனின் காதலிக்குரிய பெண்ணைப் போல் மகிழ்வுற்ற இந்த நேரத்தில்தான் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, இலிட்டன் பாவலர் எழுதிய 'மறை வழி' (Secret way) கதையைச் சேக்குவியர் பாணியில் செய்யுள் நாடகமாகச் செய்தார். இது நடிப்பதற்கென்றில்லாமல், படித்துணர்வதற் கென்றே நல்ல செந்தமிழ்நடையில் எழுதப்பட்டதாகும். இலக் கியச் செறிவும், மெய்ப்பொருள் பேருரையும் பின்னிப்பிணைந்த இந்நாடக நூல் சுற்றாரிடைப் புகழ் எய்தி பிற்காலப் பாவடிவ நாடக நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது. ஆனால். மக்கள் இலக்கியமாக விளங்கவில்லை. இந்நூல் உண்மைக்கும் ஒழுக்கத்திற்கும் உயர்வு கொடுத்திருப்பது போன்றே தமிழ் உணர்ச்சிக்கும் தமிழர் எழுச்சிக்கும் உயர்வு கொடுத்துள்ளது.


 *பரிதிமாற் கலைஞர்* 


ஆங்கில அறிவோடு வடமொழிப் புலமையும் கொண்ட பரிதி மாற் கலைஞர் ஆங்கில வடமொழி மரபுகளையும் பின்பற்றி ""நாடகவியல்", என்ற நூலெழுதிய அவர், ரூபாவதி, கலாவதி போன்ற நாடக நூல்களை எழுதினார். இவர் இயற்றிய நாடக

நூல்கள் கற்றோர்க்கே புரிய வல்ல அரிய தமிழ் நடையும், பாட்டினமும் கொண்டு பொதுமக்கட்கு எட்டாத் தொலைவிலேயே நின்று நிலவின. அவைகவை நூலாசிரியர் தாமே தம் நண்பர்களுடன் நடித்தார். வெற்றி இல்லை என்றாலும் கற்றாரிடம் நாடக்கக் கலை வளர்ந்தது. படித்துப் பண்பட்டவர்கள் நடிப்புத் துறையில் இரங்கியவுடன் சிற்றூர்களில் செத்தழிந்து கொண்டிருந்த புராண இதிகாச, நாட்டுப்புறக் கதை நாடகங்கள் எல்லாம் புற்றீசல்கள் போல் எங்கும் பறக்கத் தொடங்கின.


 *சங்கரதாக சுவாமிகள் (1867-1922)* 


19ஆம் அற்குண்டின் இறுதியில் தோன்றிய புற்றீசல் நாட ஒழுங்குபடுத்தியும் திருத்தியும் புதிய நாடகங்களாக அபிபன்பு, சுந்தர், பவளக்கொடி சீமந்தனி, சதி அனுகயா, பிரசுவாதன், சிறுத்தொண்டர்,சதிகலோசனா, ரோமியோ. ஜூலியத், கண்டிராஜா ஆகிய நாடங்களை எழுதி, நாடகக் குழுக்களுக்குக் சொடுத்துக்கொண்டிருந்தார், சங்கரதாசு சுவாமி கம் என்னும் நாடக ஆசிரியர். இருபதாம் நூற்றாண்டின் தோடக்கத்தில், இவர் பாட்டும் உரைநடையும் மக்களை மிக சுவர்ந்தன. எளிமையும் நகைச்சுவையும் இவருக்குக் கொடுத் எனிய பாடல்கள் கல்லார்க்கும் இன்ப மூட்டின.


இவகுடைய காலத்தைச் சேர்த்தவர் "நாடகத் தந்தை" என்றழைக்கப்படும் பம்மல் சம்பந்த முதலியார் ஆவார்கள். இவர் ஒருவர்தான் "காதலர் கண்கள்'', "வேதாள உலகம்", ''சபாபதி"''மனோகரா" போன்ற பல நாடகங்களை முழுக்க முழுக்க உரைநடையில் எழுதி அரங்கேற்றித் தாமும் நடித்துத் தம் தம் நண்பர்களையும் உறுப்பினர்களாக்கி நடிக்க வைத்தவர்.


20ஆம் நூற்றாண்டின் நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார் (1873-1964)


படித்துப் பட்டம் பெற்று வழக்கறிஞருமாகி, உயர் நீதிமன் ற தடுவராகவும் விளங்கிய இவர், நாடகங்களில் பங்குபெற்றதால் நஞைர்களைக் கூந்தாடிகள் என்று அழைப்பதை மாற் நீச சமுதாயத்தில் நாடகக் கலைஞர்களுக்கு மதிப்பையும் சிறப் பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். தமக்கென்று ஒரு நாடக மன் றம் அமைத்து, இருபத்தைந்து ஆண்டுகாலம் நாடகங்களை நடத் தினார், அவற்றைத் தொடர்ந்து வெளியிட்டார்.

சேக்குவியர் நாடகங்களைத் தமுனி, "அமலாதித்தன்"


"ரோமியோ - ஜூலியத்", போன்ற நாடகங்களை எழுதினார். "மனோகரா", "சபாபதி" போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட கற்பனை நாடகங்களை எழுதியும், மறைந்த மாப்பேரறிஞர்கள் சர் ஆர். கே. சண்முகம். சர் சி. பி. இராமசாமி போன்றவர் களை அந்த நாடகங்களில் நடிக்கச் செய்தும் நடிப்புக்கலைக்கு உயர்வையும் பெருமையும் சேர்த்தார். தமிழில் அதுநாள்வரை காணாத துன்பியல் நாடகங்களையும் துணிந்து நடத்திக்காட்டி வெற்றி பெற்றார்.


20ஆம் நூற்றாண்டின் நாடகத் தந்தை என்று பம்மல் சம் பந்தனார் பெயர் பெற்றாலும் நடிப்பிற்கும் படிப்பிற்கும் அறிமுக மாக அவர் நாடகங்கள் மக்களுக்கு வெறும் மகிழ்ச்சியை ஊட் டினவே தவிர, மக்கள் வாழ்வின் பொருளாதாரச் சிக்கல்களை யும், ஏற்றத்தாழ்வுப் புதிர்களையும் தீர்த்து, வாழ்வை ஒருபடி முன்னேற்றம் உந்தாற்றலாக மாறவுமில்லை; மாற்றவுமில்லை!


நாடகக் கலையை உயர்த்த வேண்டும்; நாட்டு மக்களைத் தமிழ் நாடகக் கலையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணத் தோடு, குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பூசல்களைத் தீர்க்கும் அறி வுரைகளை நிறைத்தே நாடகங்களைப் படைத்தார் பம்மல் சம் பந்தனார். நாட்டுணர்ச்சியையோ, இனவுணர்ச்சியையோ, மொழி வுணர்ச்சியையோ, சமுதாய சீர்திருத்தத்தையோ எண்ணவும் இல்லை: அதில் ஈடுபடவுமில்லை. அவரின் நண்பர் அவர் கள் யாரும் அந்தச் சூழலை விரும்பவும் இல்லை எனலாம். ஆதலால் அவர் தென்னசுப் பண்பாட்டில் புத்தெண்ண மலர்ச்சிக்குரிய திட்டப் பாங்கோடு செயல்புரியவில்லை, சிந்திக்கவில்லை. அதனால் தான் போலும் அவர் காலத்தோடு அவர் நாடகங்களின் நட மாட்டம் நின்றுவிட்டது. ஆனால், மாண்டுவிட்டதே நாடகக் கலை என்று வருந்திய நேரத்தில் அதற்குப் புத்துயிர் தந்த பெருமை இவரையே சாரும்.


தமிழகத்தில் பம்மல் சம்பந்தனாரைப் பின்பற்றிப் பல ஆசிரி யர்கள் தோன்றினார்களாயினும், அவர்கள் அனைவரும் ஐரோப் பிய நாட்டில் ஆடி அலுத்துப்போன மட்டமான காதலன் காதலி கொடியவன் கதைகளும், மூடத்தனத்தின் முடை வீசுகின்ற கூத்தாட்டமும், 'பரமசிவன் அருள்புரிய வந்து வந்து நாற்றம் போனதும், பதிவிரதைக் கின்னல் வரும். பழையபடி தீருவதுமாகிய

நாடகங்களையே நடத்தினர்.


பாவேந்தர் பாரதிதாசனும்:


ஒருநாட்டின் வேரிலுள்ள தீமை நீங்கி


உட்புறததில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும் பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டு தற்கும், சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்! (முல்லைக்காடு)


பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப் பிடித்தபிடி பில்முடித்துத் தீர்ப்பதற்கும்,


பிறநாட்டார் நாடகங்கள் செய்வார், என்றன் திருநாட்டில் பயனற்ற நாட கங்கள்


என்றார்.


அன்றிருந்தவர்கள், வாழ்க்கையைச் சித்திரிக்கும் புத்தம்புது உயிரோவியங்களையும், புதிய நாடக இலக்கணங்களையும் கையாள வில்லை.

 *

எல்லாம் மனிதனின் நன்மைக்காக* 


சமுதாயத்தில் நாடகக் கலை வளர்ச்சிக்கு, முழுமையும் தாழ்ந்த அறிவாற்றல் நிலையினின்று உயர்த்த நிலைக்கு மாறும் மாற்றத்தினால்தான் பண்பாடு உறுதியாகின்றது. ஆனால், நாடக வளர்ச்சி என்பது, படித்துப் பட்டம் பெற்றவர் நடிப்பது மட்டு மன்று, மாந்தனின் வாழ்க்கை வளர்ச்சியைத் தடை செய்து, அவனது உழைப்பாற்றல், அறிவாற்றல், படைப்பாற்றல் ஆகிய வற்றில் அடையத் தகும் வெற்றியை முடக்குகின்ற, சமுதாயத் தளையிலிருந்து தனி மாந்தனையும், மக்கள் சமூகத்தையும் விடுவிக் கும் ஆன்மீக விடுதலையையும் அது தன்னுள் கொண்டுள்ளது.


பண்பாட்டின் முன்னேற்றம் என்பது, அனைத்து மக்களின் தலன்களையும் அதிகரித்துப் பங்கேற்கச் செய்யும் கலைக் கூறுகளே. இதில் தவறிவிட்டார் 'தமிழ் நாட்டின் சேக்குவியர்' என்றழைக் கப்பட்ட நாடகத் தந்தை சம்பந்தனார்.


தெ.பொ. இருட்டினசாமிப் பாவலர்


பம்மல் சம்பந்தனார் காலத்தவரான சதாவதானம் தெ.பொ. திருட்டினசாமிப் பாவலர் நாடகத்தைச் சமுதாய விழிப்புணர்ச் சிக்கு ஒரு கருவியாக்கினார். 'பதிபக்தி' என்ற ஒரு நாடகத்தின் மூலம் கள் குடியினால் பாழ்பட்டழியும் குடும்ப ஓவியத்தை அவர் நாடகத்தில் காட்டியுள்ளார். இவரும் பரிதிமாற் கலைஞரும், பம் மல் சம்பந்தனார் போன்று தாமே நாடக அரங்கமேறி நடித்துக் காட்டினார். காந்தியடிகளின் கொள்கைகளைப் பரப்பும் 'கதர் பக்தி' என்ற ஒரு நாடகத்தை எழுதி, நாட்டில் விடுத ைஉணர் வுக்கு எழுச்சி ஊட்டினார். அடுத்துக் குதிரைப் பந்தயத்தால் குடும் பங்கள் கெட்டுக்குட்டிச் சுவராவதை உணர்த்தும் வகையில் நாட கம் எழுதி, நடித்து, உணர்ச்சியோடு சித்திரித்துக் காட்டினார். 'தேசிங்குராசன்'கதையை முதன் முதல் நாடகமாக்கியவர் இவரே. இவரிடம் சீர்திருத்தக் கொள்கையும், சமுதாய உணர் வும் இருந்தும்கூடப் பகுந்தறிவுப் பாங்கும், இனவுணர்வும், தென் மொழியுணர்வும் அற்றதால் இவர்தம் வாழ்நாளுக்குப் பின் இவர் நாடகங்களும் மதிப்பிழந்தன ; வலுவிழந்தன ; நலிவுற்றன. காலத்தின் எதிரொலியான அந்நாடகங்கள் நாடுவாரற்று, தேடு வாரற்றுப் போதல் தமிழர்க்கு இழப்பே.


மறைமலையடிகள் (1876-1950)


பல்லாவரம் பொதுநிலைக் கழகத் தலைவரும், தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியுமான மறைமலையடிகளார் தமிழ் ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் வல்லுநர். இவர் பன் மொழிப்புலவர் மட்டுமல்லர்; பல்துறை அறிஞர்; கல்விக் கடல். மண்இயல் முதல் விண்இயல் வரை அறிந்தவர். கலைநூல் முதல் கருநூல் வரை பலதுறைகளைக் கற்றவர். நூலாசிரியர். உரையாசிரியர், இதழாசிரியர், ஆய்வாளர், இனிய சொற்பொழி வாளர். நாட்டிற்கும் நற்றமிழ் மொழிக்கும் தன்னையே அளித்த ஈகையர். தூய செந்தமிழில் சமயம், இலக்கியம், இலக்கணம், புதினம், வரலாறு, அறிவியல், மொழியியல், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு துறையிலும் தம் பண்பட்ட அறிவுத்திறனால் நாற்பதற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். 'மறைமலை என்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க இறையும் தமிழன் வடமொழி தீத்தாழ்வின்றி வாழ இமிழும் கடல்சூழ் இகம்" என்று தேவநேயப்பாவாணரால் போற்றப்படும் றைமலை யடிகளார் வடமொழியிலிருந்து காளிதாசன் எழுதிய ''சாகுந் தலம்' நாடகத்தை மொழிபெயர்த்தும், தாமே 'அமராவதி அம்பிகாபதி' என்ற நாடகப் படைப்பிலக்கியத்தை எழுதி யும் வெளியிட்டார். அவை பயில்தோறும் இன்பம் பயக்கும் பைந்தமிழ் நடையும் பாதலமும் கொண்டிருந்தனவே தவிர,நடிப்பதற்கு ஏற்றனவாக இல்லை. நாட்டில் நற்றமிழ் பரவும் காலத்தில் இந்த நாடகங்கள் படிப்பதற்கென்றுமட்டும் அமையா மல். நடிப்பதற்குமுரிய நயஞ்சிறந்த விளங்கும். நாடகங்களாகவும் ''சாகுந்தலம்-நாடக ஆராய்ச்சி'' இவர் இயற்றியுள்ள தலை


சிறந்த ஆராய்ச்சி நூலாகும். தமிழில் நாடகளியல்பற்றியும்,


நாடக உறுப்பினர் பண்பு நலன்களைப்பற்றியும் மறைமலையடி


களார்போல் நிறைவான நூல் செய்தவர்கள் எவருமில்லை என


லாம்.


சு. கந்தசாமி முதலியார் (1874-1939)


பல்கலைக்கழக இளைஞர் பட்டம் பெற்ற பம்மல் சம்பந்த னாரின் நாடகங்களிலும், அவர் நாடக சபா வழியாக நடந்த சேக்குவியர் ஆங்கில நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்ற சிறந்த நடிகர். ௪. கந்தசாமி முதலியார் ஐந்தாம் சார்+ மன்னரின் பொற்பதக்கத்தை 1906-ல் தம் நடிப்புக்காகப் பெற் றவர். இவரதாம் முதல் முதலில் சமூகப் புதினங்களை நாடக மாக்கியவர். வடுவூர் கே. துரைசாமி. கே. பி. அரங்கராச போன்றோர் புதினங்கள் இவர் நாடகங்களால் புகழ்பெற்றன.


பழைய புராண நாடகங்களுடன், சமூகத்தின் எதிரொலி யான. 'இராசாம்பாள்' என்ற காதல் நாடகம், வரதட்சணைச் கொடுமையை விளக்கிய 'இராசேந்திரன்' நாடகம், மடாதி பதிகளின் வஞ்சகத்தைகா மக்களியாட்டங்களை வெளிப்படுத்திய ''சவுக்கடி சந்திரகாந்தா" நாடாம் போன்றவற்றை அரங் கேற்றிய சிறப்பும் இவருக்குண்டு. திரையுலகிலேயும் கதை உரை யாடல், இயக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு முப்பதாண்டுக் காலம் தமிழகத்தில் நாடக உலகிலும் திரையுலகிலும் இடம் பெற்றிருந்தார்.


தி இலக்குமணப் பிள்ளை


இசைப்புலமையும், வில்லோசைமிக்க ஒரு நல்லோசை-சொல் லோசை கொண்ட வீணையை இசைக்கும் ஆற்றலும், பாங்கால ஆங்கில ஆற்றலும், தீந்தமிழ் உணர்ச்சியும் கொண்டவர் திரு. தி.இலக்குமணப் பிள்ளை. கிரேக்க நாடகங்கள் இரண்டையும் 'இரவிவர்மன்' என்ற வரலாற்று நாடகத்தையும் நடிப்பதற்கு என்றும் படிப்பதற்கு என்றும் பயன்படும் வகையில், சேக்குவியரின் நாடகங்களை ஒத்து மயங்கிசைக் கலித்துறைப்பாளில் எழுதினார். சென்னையிலும், திருவாங்கூரிலும் 'இரவிவர்மன்' அரங்கேறியது. ஆனால் ஆசிரியர் அந்த நாளில் கையாண்ட நல்ல தமிழைப் போற்றுவாரில்லாமல், நாடக மேடையில் தோல்வியுற்றது. ஆனால், இலக்கிய மதிப்பீட்டளவில் இவரின் நாடகங்கள் தமிழில் இதுவரை வந்த பாநடை நாடகங்களில் தலைசிறந்தவையாகும். இவர் நாடகங்களில் மக்கட் சமுதாயத்தைச் சார்ந்த சிக்கல்கள், பீணக்குகள் அமையாதது ஒரு குறையாகும்.


தம் காலத்து அரசியல் வாழ்க்கையையோ, சமூக வாழ்க்கை யையோ நிலைக்களனாகக் கொள்ளாமல் எக்காலத்துக்கும் மாறா அறவொழுக்கங்களையும் பண்புகளையும் காட்ட எண்ணிய திரு இலக்குமணப்பிள்ளையை, ஏனோ தமிழக நாடகமேடையும், கேரள நாடகமேடையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை அவரின் நாடகத் திறனை உணர்ந்து தமிழகம் ஏற்றிப் போற்றியிருக்குமானால் திரு. இலக்குமணப்பிள்ளை ஈடு இணையற்ற இந்திய நாடக ஆசிரியர்களின் தலைமணியாய் விளங்கியிருப்பார்.


தமிழ் நாட்டில் நீண்டநெடுங் காலமாய் நாடகக் சலை, இருக்கும் நிலைமாற்றி எழுச்சியுண்டாக்கவில்லையானாலும் அது, நல்லறத்தை ஒழுக்கக் கோட்பாட்டைக் கற்பித்து வந்தது. ஒரு மதிப்புணர்ச்சி யையும் நாடகமும் நாடக மேடையும் தந்தன.


பழைய நாடகக்கலை பிற்போக்கு எண்ணங்களாலும் சாதி, மத வேறுபாடுகளாலும், பின்னர் ஒருசிலரின் வணிக மனப்பாள் மையாலும், தமிழகத்தில் வாழ்ந்த உண்மை நடிகர்களின் ஏழ்மை யினாலும் வறுமையினாலும் சிறுகச்சிறுக செல்லரித்துக்கொண்டு வந்தது.


தங்கள் வாழ்வையே நாடகக் கலைக்கு முதலீடாக்கி, காவியச் சிறப்பும், உள்ளங் கவரும் கற்பனைச் சுவையும், இசையுணர்ச்சி யும், மக்கள் பண்பைப் பக்குவப்படுத்தும் உரையாடலும் நிரம்பிய எண்ணற்ற நாடகங்களை இவர்கள் ஈந்தனர் என்றாலும், ஒரு குவளைப் பாலுக்குச் சுவை கூட்டும் ஒரு தேக்கரண்டி சருக்கரைக்கு ஏங்குவது போல, காலம் மற்றொரு நாடகக் கலைஞனை எதிர் நோக்கியது.



அண்ணா ஒரு நாடக அறிஞர் அவர் கலை நயமும் - கருத்து வளமும்


டாக்டர் இரா சனார்த்தனம்.

தங்கூரம் வெளியீடு

உலகத் தமிழர் இல்லம்

12. மாண்டித்சந்து

எழும்பூர்,

சென்னை-600 008.

முதல் பதிப்பு 15 .10. 1974

இரண்டாம் பதிப்பு 1.1.1978

No comments:

Post a Comment

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...