நான் பேரன்பினன், அவள் பேரன்பினள்
நான் காதலால் கசிந்துருக,
அவள் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறாள்.
என் வார்த்தைகள் மௌனமாய் வீழ,
அவள் பார்வையாள்
கவிதையாய் மாற்றினாள்.
அவள்தன் பாதம்,
என் பாதை மாற்றியது.
அவள்தன் பார்வை,
என்னைப் பாவையாக்கியது.
அவளின் புன்னகை,
என் நாட்களின் வசீகரம்.
அவளின் மௌனம்,
என்னைச் சிற்பியாக்கியது.
உடை களைந்து
நாம் உருகிப் போகும் தருணம்,
நம் உருமாறி,
தடுமாறி
உறைந்து போகிறோம்.
உறைதலில் இருந்து மீள்கிறோம்,
காம பானத்தின் காதல் வில்லிலிருந்து.
அவளின் பேரழகின் பிரதிபலிப்பு நான்.
அவள் கனவில் மலர்ந்த நிழல் நான்.
அவள் சிரிப்பின் ஒலியில் நான் இசை.
அவள் உரையாடலில் மறைந்த கவிதை நான்.
என் கண்களின் தூரிகையால் வரைந்த
பேரழகுப் பதுமை அவள்.
பதுங்கு குழிகள் இல்லை
பதுங்கிக் கொள்ள
ஆம்....
நினைவில் பார்த்துக் கொண்டே
ஓய்ந்து விடுவேன் பாருக்குள்ளே.
சொல்லாமலே நீளும் பேரன்பு.
என் காவியக்காரியின் பொன் அன்பு.
அவள் - பொன் நிற பாதம் பொழுதுகளின் ஒளியாக .....
வெண்ணிற மேகம் தடுமாறும் பேரழகியவள்.
என் சுவாசக் கூட்டில் வாசம் செய்கிறாள்.
நான் பேரன்பினன், அவள் பேரன்பினள்.
