Thursday, October 9, 2025

இருளி - அதிகாரத்தை மறுதலிக்கும் பின்னைக் காலனியப் பிரதி


கல்வி அடித்தள மக்களின் வாழ்க்கையில் உருவாக்கிய பெரும் பெரும் மாற்றங்களைக் காட்டிலும் (அது முழுமையான மாற்றங்களை உருவாக்கி விடவில்லை என்றாலும் கூட)  அதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்கவாதிகளின் மனவெளிகளில் நிகழ்ந்த அதிர்வுகளும் அச்சங்களும் மீண்டும் நினைவுகளுக்குக் கொண்டு வரப்பட்டு கதையாடப்பட வேண்டும்.

அதிகாரங்கள் நிலைகுலைந்து போன அந்த வரலாறுகள் சமநிலைச் சமூகத்திற்கான அடிப்படைகளை உருவாக்கித் தரும்.

அதிகாரத்திற்கு எதிராக உண்மைகளை பேசுவது என்பது அதிகாரத்தின் இயலாமைகளைச் சுட்டிக் காட்டுவதும் தடுமாற்றங்களை அடையாளப்படுத்துவதும் தோல்விகளைக் கொண்டாடுவதும் தான். -

சாரோன் அதைச் செய்ய முயன்றிருக்கிறார்.



-- இருளி- சாரோன் .

பன்றிகளுக்குப் பூஜை அறையும் கக்கூஸ் குழியும் இரண்டும் ஒன்றுதான்.......


முன்பு அவர்களது கக்கூஸ்களை மொய்த்த ஈக்கள் எல்லா வீடுகளுக்குள்ளும் நுழைந்ததைப் போலவே இப்போ அவர்களது மலங்களைத் தின்ற பன்றிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்து அவர்களது மலங்களாலேயே அந்த வீட்டை நாறடித்தன. (ப.120)

மனித மலத்தை இன்னொரு மனிதனைக் கொண்டு தன்னுடைய அதிகாரத்தால் அள்ளச் செய்யும் இந்த இழிநிலை இன்னமும் சமூகத்தில் வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிற சூழலில் நாவல் முக்கியமானது ஒரு உரையாடலை துவக்கி வைத்திருப்பதாக நினைக்கிறேன்.


ஆதிக்கச் சமூகத்தின் ஆழ்மனதில் உறைந்து கிடக்கிற, பீ நாற்றத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் பிரதி.

இருளி - அதிகாரத்தை மறுதலிக்கும் பின்னைக் காலனியப் பிரதி

கல்வி அடித்தள மக்களின் வாழ்க்கையில் உருவாக்கிய பெரும் பெரும் மாற்றங்களைக் காட்டிலும் (அது முழுமையான மாற்றங்களை உருவாக்கி விடவில்லை என்றாலும...